Saturday, 3 October 2015

சக்கரம் சுழலாதோ!



காலச்சக்கரத்தின் வேகச் சுழற்சியிலே

கட்டுண்டு நிற்கிறேன் நானும் இங்கே,

உங்கள் கால்களில் சக்கரம் கட்டிக்

காற்றைக் கிழித்து நீங்கள் செல்கையிலே!

கண்களில் ஏக்கம் சூழ நிற்கிறேன்

களிப்புடன் நீங்கள் சிரிப்பதைக் கண்டு!

காலம் மாறவே, காட்சி மாறவே,

காத்து நிற்கிறேன் கண்ணீருடன்...

கவலைகள் காற்றிலே கலக்காதோவென்

காதில் ஒலிக்கும் இம்மணிச்சத்தம் போல்?



சில ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய 'On The Wheels Of Life' என்ற கவிதையின் தமிழாக்கம் இது! படித்துவிட்டு தங்களின் கருத்துக்ளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.














Wednesday, 15 October 2014

When Time Comes...

                                             When Time Comes....




Dark clouds fill the sky,
Ominous thunder roars by;
The sun is gone, buried deep,
Inside clouds, piled in heaps.
There’s no light, not a ray;
Don’t even know whether it’s night or day;

I try hard to break free,
From these shackles that bind me;
The more I try, the more I fail;
Sadly, all I can do is wail!
Slowly, Slowly everything changes;
Clouds part and the sun emerges;

Night has turned into day,
My eyes see the first ray!
New hopes fill my way;
I might be an ugly caterpillar today,
 As hope wipes out my sorrow,
I know now, I’ll be a butterfly tomorrow!!




                                         -Pavithra Seshadri

Sunday, 31 August 2014

தீபாவளித் திருநாளையொட்டி நடைபெறும் கவிதைப்போட்டிக்கான ஓவியக் கவிதை!


படியருகே கொடிமலராய்!
 
 
படியருகில் கொடிமலராய்
பாவையவள் நின்றிருக்க
கோவை இதழ்களிலே
குறுநகை அரும்பிடுதே!
 
நெஞ்சில் நிறைந்தவனின்
நினைவுகளில் உன்வாசம்!
தென்றல் தூதாகி
தெரிவிக்கும் உன்நேசம்!
 
கண்ணிரண்டின் மொழிகளிலே
எண்ணங்கள் எடுத்துரைக்க
இன்னுமொரு மொழிக்கிங்கே
இடமில்லை என்றுரைப்போ!
 
வில்லொத்த புருவத்தில்
வீழ்ந்ததென்ன வானவில்லும்!
கயலிரண்டு விழியாகி
கவர்ந்திழுக்கச் செய்கிறதே!
 
நெஞ்சத்தில் ஓவியமாய்
நிற்பவந்தான் யாரோ?
தஞ்சம் அடைந்தவளின்
தவிப்பினை அறியானோ?
 
பூந்தென்றல் காற்றே நீ
பூவையிவள் மனநிலையை
காவிய நாயகனின்
காதருகில் சொல்லாயோ!
-சே. பவித்ரா


இரண்டாம் கவிதைக்கான இணைப்பு.இதோ:

நாடுயர நாமுயர்வோம்!-தீவாவளித் திருநாளையொட்டி நடத்தப்படும் கவிதைப்போட்டிக்கான இரண்டாவது கவிதை!


 
நாடுயர  நாமுயர்வோம்!


இன்றைய பாரதத்தின் இளைஞர்களே சிந்திப்போம்!
நன்மைகள் பெருகி நம்நாடு உயர்ந்திடவே
பெண்களுக் கெதிரான வன்முறைகள் ஒழித்திடுவோம்!
கண்கள் அவரென்போம்! காத்திடுவோம் அவர் உரிமை 

 
பஞ்சமிலா நிலையடைய பயிர்வளம் பெருக்கிடுவோம்!
லஞ்சமெனும் பேயை அஞ்சாமல் அழித்திடுவோம்!
பிஞ்சு மனங்களிலே நல்விதைகள் ஊன்றிடுவோம்!
நஞ்சான கொடும்போதை நமையாள அனுமதியோம்! 

 
ஏற்றம்தரும் கல்விதனை எல்லோர்க்கும் அளிப்பதென்று
கற்றோர்  முன்வந்து கல்லாமை இருளொழிப்போம்!
பற்பல துறைகளிலே பாரதம்தான் முன்னோடி!
நற்கல்வி பயிற்றுகையில் நம்பெருமை உணர்த்திடுவோம்! 

 
இந்நாட்டு நதியனைத்தும் எல்லோர்க்கும் பொதுவென்போம்!
தென்னாடும் வளம்காண திட்டமிட்டு நதியிணைப்போம்!
எந்நாளும் இலவசத்தை எதிர்பார்க்கும் நிலைமாற்றி
பொன்னான நல்லுழைப்பால் பொருளீட்டி வாழ்ந்திடுவோம்!

 
வன்முறை வேரறுத்து அன்புநெறி வளர்த்திடுவோம்!
கனிம வளம்காப்போம்! காடுகள் தமைக்காப்போம்!
மூன்றாம் உலகப்போர் நீருக்காய் நேர்ந்திடுமாம்!
வான்வழங்கும் மழைநீரை வளம்காக்கச் சேமிப்போம்!

 
நற்கல்வி ஈன்றபயன் நாட்டிற்கு நாமளிப்போம்!
பெற்றவர் போற்றிடுவோம்! பேணிக் காத்திடுவோம்!
நாட்டைக் காப்பவரை நாமுயர்த்திப் போற்றிடுவோம்!
நாடு உயர்ந்தாலே  நம்வாழ்வும் உயராதோ?

-சே.பவித்ரா

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

Thursday, 14 August 2014

      INDEPENDENCE DAY!

                                                      Through all the bloodshed and wars,
                                                      We fought to earn freedom to all;
                                                      Ahimsa and Satyagraha as tools,
                                                      And blood flowing down to pools,
                                                      We made huge sacrifices,
                                                      To free ourselves from the vices;
                                                      Here we are shouting for glee,
                                                      As the shackles that bound us flee;
                                                      May the Heavens bless us this day!
                                                      In harmony and peace long live we may!!
                                                                                        -PAVITHRA SESHADRI

  HAPPY INDEPENDENCE DAY!                                                                        JAI HIND!

                                                                 

Friday, 27 June 2014

A Wingless Bird- Poem by Pavithra Seshadri

A Wingless Bird!!

Reaching out to the evading now I sigh,
A wingless bird trying to fly;
Tears fill my eyes as I fail,
But! Alas! I am so frail,
Reaching out again and again,
My mind goes numb from pain;
All my efforts are in vain;
Is it wrong to seek the right?
Chase the darkness and spread the light?
Why is the world so unfair?
The weak and poor never find their share?
But, who am I to question the might?
After all! I just failed my first flight !
                                                     
                                                 -Pavithra Seshadri

Nothing is perfect!!
Yet,imperfections are the essence of beauty!!

Picture courtesy: Google



Sunday, 4 May 2014

காற்றாலே தோற்றமிங்கு!



அடிக்கின்ற காற்று
அடைபட்ட காற்றை
ஆடவைத்துப் பார்த்திருக்கும்!

காற்றடைந்த காரணத்தால்
காணுதிங்கே பல்லுருவம்!


அடைபட்ட காற்று
விடைபெற்றுப் போய்விட்டால்
உருவத்தால் பயனுண்டோ?
உண்மையிது உலகத்தில்!

-பவித்ரா

பட உதவி: கூகிளுக்கு நன்றி!