ஒளி காட்டும் வழி!
குட்டிடும்போதெல்லாம் ‘பட்’டெனப் பொறியுடனே
பதிக்கிறதே தன்னெதிர்ப்பை பொட்டுப்
பட்டாசு!
ஒருமுகப்படுத்தி உன் திறமை வெளிப்படுத்த
உயர்வது உறுதியென உணர்த்தியது கலசஒளி!
தரையில் சுழன்று தனைச்சுற்றி
ஒளிபரப்பி
உடலுழைப்பின் அவசியத்தை உணர்த்தியது
சக்கரம்!
தன்னுடல் தீய்ந்தாலும் புன்முறுவல் ஒளிசிந்தி
தன்னலம் பாராமை தனையுரைத்தது
மத்தாப்பு!
ஒற்றுமையைக் குலைத்திடவே பற்ற வைப்பவரை
வெடித்து ஒளிகாட்டி விரட்டின
சரவெடிகள்!
நற்றிறம் போதாது ‘நா’காத்தல்
வேண்டுமென
வெடிக்காமல் ஒளிசிந்தி வீழ்ந்ததொரு பட்டாசு!
சேரா இடம் சேர்ந்து சீரழிந்த பின்னாலே
சுட்டபின்பு பொறிதட்ட கருகிடும் சுருள்கேப்பு!
தடைகளைத் தகர்த்தெறிந்து
தாமுயர்ந்தோர் தனைப்பார்த்து
உலகம் வியக்குமென
வண்ண ஒளியிறைத்து வாழ்த்தியது வாணவெடி!
பட்டாசின் வெடிஒளியும் பலவழிகள்
காட்டுமென
இட்ட கவிதை இது! ஏற்றிடுவீர் நடுவர்களே!
-பவித்ரா
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
ரூபன் அவர்களின் கவிதைப் போட்டிக்கான கவிதை!
ரூபன் அவர்களின் கவிதைப் போட்டிக்கான கவிதை!
அருமை... நடுவர்களுக்கு அனுப்புகிறேன்...
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!
Deleteவலையுலகம் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!
Deleteவலையுலகின் புதுவரவிற்கு வாழ்த்துகள்! நல்லொளி பரவி நன்மைகள் பிறக்கட்டும்! தொடர்க!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!
Deleteவலையுலகின் புதுவரவிற்கு வாழ்த்துகள்!
ReplyDeleteஅருமையான ஆக்கம். நல்லதொரு முயற்சி.
நல்லொளி பரவட்டும். நன்மைகள் விளையட்டும்.!
தொடர்க!! நல்வாழ்த்துகள்.
[எனக்கு மிகவும் தொல்லைதந்துவரும் word verification என்பதை எடுத்து விடவும். அது எனக்கு மிகவும் எரிச்சலூட்டுகிறது.]
தங்களின் வருகையும் வாழ்த்தும் மிகவும் மகிழ்ச்சியளித்தது! தங்களின் ஆணைப்படி word verification என்பதை எடுத்துவிட்டேன் ஐயா! நன்றி!
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletepavi sesh 20 October 2013 00:46
Delete//தங்களின் வருகையும் வாழ்த்தும் மிகவும் மகிழ்ச்சியளித்தது! தங்களின் ஆணைப்படி word verification என்பதை எடுத்துவிட்டேன் ஐயா! நன்றி!//
மிக்க நன்றி, பவித்ரா.
“பவித்ரா” [PURITY] என்பது மிகவும் புனிதம் வாய்ந்த அழகான பெயர்.
ஏனென்றால் அது என் அருமைப்பேத்தியின் பெயராகும். ;)
என் இல்லத்தின் பெயரும் “பவித்ராலயா” என்பதே. ;)
http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html
’பவித்ரா’க்களுக்கு என் மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.
அன்புடன் VGK
its so nice.... go ahead dear.... im not a good poetist but a good reader... ur kavithai was so nice
ReplyDeleteThank You Dear for your comment!
ReplyDeleteபுவிக்கு
ReplyDeleteபவிஎன்னும்
கவி வரவு
ஒளியும் ஒலியும்
இணைந்து இன்பம் தரும்
தீபவொளி கவிதை வரிகள்
பாராட்டுக்கள்.
வெற்றியோடு கவிதா
வானில் வலம் வர வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!
Deleteவணக்கம்
ReplyDeleteபவித்ரா..
தங்களின் கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்...
-----------------------------------------------------------------------------------------------------------
கவிதை நன்றாக உள்ளது போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
------------------------------------------------------------------------------------------------------------
புதிதாக வலைப்பூ ஆரம்பித்ததாக சொன்னீர்கள்.... முதலில் வாழத்துக்கள் இந்த வலைப்பூவில் தீபாவளி போட்டிக்கவிதை மட்டும்மல்ல இன்னும் பல கவிதைகள் சிறுகதைகள். வலையுலகிற்கு வலைஏற்றம் செய்வீர்கள் என்று என்னுகிறேன்.....
சிறந்த படைப்புக்கள் வழங்கி சிறந்த படைப்பாளியாக இந்த உலகில் உருவாக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....
-----------------------------------------------------------------------------------------------------------
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
----------------------------------------- -20/10/2013------------------------------------------------
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!
ReplyDeleteதமிழ் வலையுலகின் புது வரவு...... மிக்க மகிழ்ச்சி பவி.....
ReplyDeleteசிறந்த படைப்புகள் தர வாழ்த்துகள்....
கவிதைப் போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.....
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!
Deleteவலையுலகின் புதுவரவிற்கு முதலில் மனம் திறந்த நல்வாழ்த்துகள்! ஆரம்ப கவிதை பதிவு மிக அருமை..பாராட்டுக்கள். கவிதையோடு மற்றும் நின்று விடாமல் உங்கள் வயதிற்கு உட்பட்டவர்களின் எண்ணங்களை முயற்சிகளை வெற்றி தோல்விகளையும் பதிவாக எழுதி வெளியிடுங்கள் இதை சொல்லக் காரணம் சிறியவர்களிடம் பல பாடங்களை பெரியவர்களான நாங்களும் கற்று கொள்ளும் காலம் இது. உங்களிடம் இருந்து நாங்கள் கற்றவைகளை கொண்டு எங்கள் குழந்தைகளை வழி நடத்த நல்ல ஐடியா பலவும் கிடைக்க கூடும்.
ReplyDeleteஉங்கள் முயற்சிக்கும் வருகிற தீபாவளிக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பதினர் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.
வெங்கட் நாகராஜ் அவர்களின் அறிமுகத்தால் உங்கள் தளம் அறிந்தேன்
தங்களைப் போன்றவர்களின் ஊக்கமளிப்பு என்னை எழுதத் தூண்டுகிறது! நன்றி ஐயா! திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கும் என் பணிவான நன்றி கலந்த வணக்கங்கள்!
ReplyDeleteவரிகளில் விரியும் ஒளி ரசிக்கவைத்தது ..பரிசுபெற வாழ்த்துகள்..!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
ReplyDelete//தன்னுடல் தீய்ந்தாலும் புன்முறுவல் ஒளிசிந்தி
ReplyDeleteதன்னலம் பாராமை தனையுரைத்தது மத்தாப்பு!//
ரசித்த வரிகள்!
kbjana.blogspot.com
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
Deleteவலையுலகின் புதுவரவுக்கு நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்களை அறுமுகப்படுத்திய சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி!
இங்கு உங்கள் கவிதை மிக அருமை! நல்ல கற்பனை!
மிகவும் ரசித்தேன்!
போட்டியில் வெற்றிபெற இனிய வாழ்த்துக்கள்!
உங்கள் ஆக்கங்கள் தொடரட்டும்....
தொடர்கிறேன்..
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
Deleteபுதிதாக வலைப்பதிவு ஆரம்பித்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிகவும் சிறப்பாக விதம்விதமான பட்டாசுக்களைவைத்தே கவிதை எழுதியிருப்பது புதுமையாக இருக்கிறது.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
Deleteபுதிதாக வலைத்தளம் ஆரம்பித்து, போட்டியில் வெற்றியும் பெற்றுவிட்டீர்கள், வாழ்த்துகள்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அம்மா!
Deleteரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்கு நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!
Deleteதீபாவளிக் கவிதைப் போட்டியில் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!
Deleteகவிதை சிறப்பு. வாழ்த்துக்கள் வெற்றி பெற்றமைக்கு.
ReplyDeleteநன்றாக வருகிறது உங்களுக்கு தொடர வாழ்த்துக்கள்.....!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!
Deleteமுதல் வரியிலேயே ....
ReplyDeleteசிறு பொட்டு பட்டாசு கூட தன் உணர்வைக் காட்டுது .. . .
கவிதை வெளிப்பாடு அருமை...
சிறப்பான வெற்றியும் நல்ல கவித்துவமும் பெற
வாழ்த்துக்கள்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா!
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
வண்ண வெடியாக வார்த்தை ஒலிக்கிறது
எண்ணம் மயங்கும் இனித்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
மிக்க நன்றி ஐயா!
Deleteவாழ்த்துக்கள் தோழி
ReplyDeleteநன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteதீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் வெற்றியடைதமைக்கான சிறப்புச்சான்றிதழ் அனுப்பப்பட்டுள்ளது. தங்களின் கையில் வந்து கிடைத்தவுடன் rupanvani@yahoo.com
dindiguldhanabalan@yahoo.com இந்த இரு மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்தவும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சான்றிதழ் நேற்று கிடைக்கப்பெற்றேன்! மிக்க நன்றி ஐயா!
Delete