Showing posts with label ஒளி காட்டும் வழி. Show all posts
Showing posts with label ஒளி காட்டும் வழி. Show all posts

Saturday, 19 October 2013

ஒளி காட்டும் வழி!


              


ஒளி காட்டும் வழி!

குட்டிடும்போதெல்லாம்  ‘பட்’டெனப்  பொறியுடனே
பதிக்கிறதே தன்னெதிர்ப்பை பொட்டுப் பட்டாசு!

ஒருமுகப்படுத்தி  உன் திறமை வெளிப்படுத்த
உயர்வது உறுதியென உணர்த்தியது கலசஒளி!

தரையில் சுழன்று தனைச்சுற்றி ஒளிபரப்பி
உடலுழைப்பின் அவசியத்தை உணர்த்தியது சக்கரம்!

தன்னுடல் தீய்ந்தாலும் புன்முறுவல் ஒளிசிந்தி
தன்னலம் பாராமை தனையுரைத்தது மத்தாப்பு!

ஒற்றுமையைக் குலைத்திடவே பற்ற வைப்பவரை
வெடித்து ஒளிகாட்டி விரட்டின சரவெடிகள்!

நற்றிறம் போதாது ‘நா’காத்தல் வேண்டுமென
வெடிக்காமல் ஒளிசிந்தி  வீழ்ந்ததொரு பட்டாசு!

சேரா இடம் சேர்ந்து சீரழிந்த பின்னாலே
சுட்டபின்பு பொறிதட்ட  கருகிடும் சுருள்கேப்பு!

தடைகளைத் தகர்த்தெறிந்து தாமுயர்ந்தோர் தனைப்பார்த்து
உலகம் வியக்குமென  
வண்ண ஒளியிறைத்து வாழ்த்தியது வாணவெடி!

பட்டாசின் வெடிஒளியும் பலவழிகள் காட்டுமென
இட்ட கவிதை இது! ஏற்றிடுவீர் நடுவர்களே!



-பவித்ரா


பட உதவி: கூகிளுக்கு நன்றி!



ரூபன் அவர்களின் கவிதைப் போட்டிக்கான கவிதை!