Thursday, 24 April 2014

வாக்கு!


ஊர்கூடித் தேரிழுத்தல்
ஊருக்கு அழகு!
தேர்தல் எனும் தேர்வு
தேசத்திற்கழகு!


வாக்களித்து
வளைய வந்தவர்களில்
வாகை பெறுபவரை
வாக்களிக்கும் உரிமையுள்ளோர்
வாக்களிப்பால் தெரிவுசெய்வர்!

வாக்களித்த அடையாளம்
வளர்ச்சிக்கு அடையாளம்!

வாக்களிப்பில் களிப்புண்டு!
வளரும் நம் நாட்டின்
வாளிப்பும் அதிலுண்டு!

-பவித்ரா!

Sunday, 13 April 2014

சித்திரைத் திருநாள் வாழ்த்து!



அனைவருக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

சித்திரை மாதம்தான்
எத்தனை உயர்ந்த்து பார்!
மணம்வீசும் மலர்கள்பல
மலர்ந்திடுமே இந்நாளில்!

வேப்பம்பூ வாசம்
வீதிஎங்கும் தான் வீசும்!
வண்ணப் பூமரங்கள்
வழியெங்கும் பூச்சொறியும்!

அடுத்து வரும்மழையை
அடைத்திட வழிசெய்ய
நீர்நிலைகள் சீர்பெறவே
நின்றமழை தானுதவும்!

முக்கனிகள் விளைந்திடும்!
முழுநிலவு சுகம்கூட்டும்!
நிழலின் அருமைதனை
எழும்வெயில் உணர்த்திடும்!

நித்திரையில் உழலாமல்
நித்தம் உழைத்திருக்க
வெற்றி எனும் கனியை
விரைந்தளிக்கும் இவ்வாண்டு!

-பவித்ரா

 பட உதவி: கூகிளுக்கு நன்றி!