Tuesday 5 November 2013

படித்ததில் பிடித்தது!

தமிழகம் பற்றிய ஒவ்வொரு தமிழனின் கனவு இது!
=========================================

கட்டிய மனைவியை
கரையில் காக்கவைத்து
கட்டுமரம் ஏறி
கடலுக்குள் சென்றவன்
கட்டுடலில் குண்டு பாயாமல்,
கரை வந்துச் சேர வேண்டும்.

கல் மனங்கள் கரைய வேண்டும் எங்கள்
கல்லணை நிறைய வேண்டும்
கண்ணீர் சிந்தும் கருப்பு வைரங்கள்
கம்பீரமாய் வாழ வேண்டும்.

பள்ளிச் சென்ற மாணவி
பாவிகளிடம் சிக்காமல்
பாவாடை கசங்காமல்
பத்திரமாய் வீடு வந்துச்
சேர வேண்டும்.

வங்கிக் கணக்கில் வற்றாத
வரவு இல்லாவிட்டாலும்
வங்கி அதிகாரிகள் எங்களையும்
வரவேற்று இன்முகத்துடன்
வாய்மொழிய வேண்டும்.

வரிச்சலுகை வழங்கா விட்டாலும்
வணிகக் கடை பெயர் பலகைகளில்
வண்ணமாய் தமிழ் வாழ வேண்டும்.

பணத்தைப் பிடுங்கிக் கொண்டு
பால் குடிக்கும் பிள்ளைவாயில்
பகோடாவை திணிக்கும்
தனியார் ஆரம்பப் பள்ளிகள்
தரைமட்டமாக வேண்டும்.

பணம் ஈட்ட பல வழிகள் இருக்க
பல்லாயிரம் உயிர்களை நோகடித்து
பணம் பார்க்கும் டாஸ்மாக் இல்லாத
பண்டிகை வேண்டும்.

ஏமாறும் கூட்டம் இருந்தால்
எளிதில் விற்றுப் போகும்
எதிர்மறை கருத்தும் என்ற
எச்சமான எண்ணமில்லாத
ஊடகங்கள் வேண்டும்.
நன்றி: திரு முகுந்தன் அவர்களின் மின்னஞ்சல்

8 comments:

  1. நிஜமாக வேண்டும் இந்தக் கனவு

    ReplyDelete
  2. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

    ReplyDelete
  3. கனவு மிகவும் அருமை. கனவு நனவானால் எல்லோருக்கும் நல்லது தான். படைப்பாளிக்குப் பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

      Delete
  4. படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது.

    கனவு நினைவாகட்டும்..... அது மட்டும் நடந்துவிட்டால்...... மகிழ்ச்சி பொங்கும்.....

    ReplyDelete
  5. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

    ReplyDelete
  6. வணக்கம்
    கனவு நனவானால் எல்லோரிடமும் மகிழ்ச்சி பொங்கும் கவிதை வடித்த விதம் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

    ReplyDelete